காதல் வரக்காரணம்
கண்கள்
அந்தக்கண்களில்
நீர்வரக்காரணம்
பெண்கள்
க.பவன்
எனக்குள் உறைந்து விட்டாய்…
மே 4, 2008கண்ணில் உறவாடி
என்னுள் கருவான
காதல் உறவே…
மண்ணில் மழையின்றி
வாடும் பயிராக
முடிவின் வழிசென்ற எனக்கு
கண்ணின் அசைவாலே
காதல் மொழி பேசி
வாழ்வின் பொருள் சொன்ன
உயிரே…
உயிரின் உயிராகி
உறவின் உறவாகி
எனக்குள் உறைந்து விட்டாய்
நீ……
-K.PAVAN-
சோகத்தை ரசிக்காதே..
April 30, 2008எரிகின்ற விழியில்
சொரிகின்ற கண்ணீர்
துளியெங்கும் உன்முகம்
சரிகின்ற சூரியன்
சாயங்கால நேரம்
சந்தித்த பொழுதுகளை
சிந்திக்க வைக்கிறது..
சிந்தையில் நிறைந்திருக்கும்
சிரிக்கும் மலரே…
தூரத்தே விலகி நின்று-என்
சோகத்தை ரசிக்காதே..
-K.Pavan-
மௌனத்தால் கொல்லாதே
April 30, 2008மௌனத்தால் கொல்லாதே
மனதை வாட்டாதே
எண்ணத்தில் தினமும்
இனிமைகளைத்தந்தவளே
இன்று….
என்மனதை எரித்து-அதில்
குளிர்காய நினைக்காதே
என்மனதுக்குள் இருக்கும்
உன்னையும் அது சுட்டுவிடும்
இது என்கட்டளை அல்ல
கோரிக்கை…. Please
-K.Pavan-
ithayamathy பதிப்பித்தது.
ithayamathy பதிப்பித்தது.
ithayamathy பதிப்பித்தது.