எனது தேசத்தின் புனித முற்றத்தில்

எனது தேசத்து மண்ணில் சாவதே
எனக்குப் போதும்
அதற்குள் புதைக்கப்படுவதும்
எனக்குப் போதும்
உருகி
அந்த மண்ணுடன் கலந்து
மறைந்து போவதும்
எனக்கப் போதும்
எனது தேசத்தின் புனித முற்றத்தில்
ஒரு கைப்பிடியளவு புழுதியாய்
ஒரு புல்லின் இதழாய்
ஒரு பூவாய் இருப்பதும்
எனக்குப் போதும்

மறுமொழி இடுக