கண்களில்

நவம்பர் 24, 2009

காதல் வரக்காரணம்
கண்கள்
அந்தக்கண்களில்
நீர்வரக்காரணம்
பெண்கள்

                                                              க.பவன்


உன்னைப்போல் ஒருவர்…

நவம்பர் 24, 2009

எனக்கு
உண்மையாக நேசிக்க
உன்னைப்போல் ஒருவர்
இல்லை..

இனிமேல் கிடைப்பவர்கள்
என்னைப்போல்
உன்னை நேசிக்கப்போவதும்
இல்லை..

க.பவன்


எனக்குள் உறைந்து விட்டாய்…

மே 4, 2008

கண்ணில் உறவாடி
என்னுள் கருவான
காதல் உறவே…

மண்ணில் மழையின்றி
வாடும் பயிராக
முடிவின் வழிசென்ற எனக்கு

கண்ணின் அசைவாலே
காதல் மொழி பேசி
வாழ்வின் பொருள் சொன்ன
உயிரே…

உயிரின் உயிராகி
உறவின் உறவாகி
எனக்குள் உறைந்து விட்டாய்
நீ……

-K.PAVAN-


சோகத்தை ரசிக்காதே..

April 30, 2008

எரிகின்ற விழியில்
சொரிகின்ற கண்ணீர்
துளியெங்கும் உன்முகம்

சரிகின்ற சூரியன்
சாயங்கால நேரம்
சந்தித்த பொழுதுகளை
சிந்திக்க வைக்கிறது..

சிந்தையில் நிறைந்திருக்கும்
சிரிக்கும் மலரே…
தூரத்தே விலகி நின்று-என்
சோகத்தை ரசிக்காதே..

  -K.Pavan-